ARTICLE AD BOX
வரும் 2026 இல் தமிழக வெற்றி கழகம் நிச்சயம் மாற்றத்தை உருவாக்கும், மூன்று மணி நேர சினிமாவுக்கே ஒரு வில்லன் தேவைப்படும்போது இவ்வளவு பெரிய அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய்க்கு நெருக்கடி இருக்காதா..? என்று கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நடிகர் விஜயின் நண்பர் நடிகர் தாடி பாலாஜி பேட்டி அளித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதி 200 அடி சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோடை வெயிலுக்கு தாகம் தணிக்கும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி கொளத்தூர் ஓய்பிஎம் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீர்மோர், தர்பூசணி, வாட்டர் பாட்டில் போன்ற நல உதவிகளை தவெக தலைவர் விஜய்-ன் நண்பரும் நடிகருமான தாடி பாலாஜி பொதுமக்களுக்கு வழங்கினார்.
மேலும் படிக்க | டாஸ்மாக் முறைகேடு குறித்து விஜய் வெளியிட்ட புதிய அறிக்கை
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், 2026 ஆம் ஆண்டு நிச்சயம் ஒரு மாற்றத்தை தமிழக வெற்றி கழகம் நிகழ்த்தும் என்றும், கண்டிப்பாக அங்கீகாரம் பெறக்கூடிய வாக்குகளை நாம் பெறுவோம் என்றும், திமுக அதிமுகவிற்கு மாற்றுக் கட்சியாக தவெக வளரும் எனவும் கூறினார். மேலும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு சீட் ஒதுக்கினால் முன் நின்று நிற்பேன் என்று கலகலப்பாக கூறிய தாடி பாலாஜி, கட்சி தொடங்கியதும் தவெக விற்கு நெருக்கடி உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மூன்று மணி நேர சினிமாவுக்கே ஒரு வில்லன் தேவைப்படும்போது இவ்ளோ பெரிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள எங்களுக்கு நெருக்கடி இருக்காதா என கேள்வி எழுப்பியதுடன், தாங்கள் எந்த நிகழ்ச்சிக்கும் முறையாக காவல் துறையிடம் அனுமதி பெற்று நடத்துவோம் எனவும் கூறினார்.
திமுக மீது விஜய் தாக்கு
தமிழகத்தில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்ட அறிக்கை பெரும் பூகம்பத்தை கிளப்பி நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுக அரசிற்கு எதிராக காட்டமான அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், டாஸ்மாக் பணியாளர்களைப் பணியமர்த்துதல், இடமாற்றம் செய்தல், வாகனங்கள் டெண்டர் ஒதுக்கீடு, பார் உரிமம் வழங்கும் டெண்டர் ஒதுக்கீடு, கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் பெறப்பட்ட ரூபாய் 10 முதல் 30 வரையிலான கூடுதல் தொகை, டிஸ்டில்லரீஸ் மற்றும் பாட்டிலிங் கம்பெனிகள் மூலம் நடந்த முறைகேடுகளைப் பற்றிப் பெரிய பட்டியல் திமுக மீதான ஊழலை நிரூபிக்கிறது.
இதை வைத்துப் பார்க்கையில் முறைகேடு செய்வதில் பெரும் அனுபவம் வாய்ந்த, கைதேர்ந்த மற்றும் நுட்பமான மூளைகளால் மட்டுமே இவ்வளவு பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவே அர்த்தம் கொள்ளத் தோன்றுகிறது. அமலாக்கத் துறை, டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்துப் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளைப் பார்த்தால், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைப் பெருமையாகப் பறைசாற்றும் இதே அரசுதான் மக்கள் நலனைக் கெடுத்து, மதுவிற்கு அடிமையாக்கும் மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்துத் தான் முறைகேடும் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் படிக்க | நீயா நானா மும்மொழிக் கொள்கை எபிசோடு நிறுத்தம் - யார் கொடுத்த அழுத்தம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ