பஞ்சாபில் கேஜரிவால் போட்டியில்லை! வேட்பாளர் அறிவிப்பு!

4 hours ago
ARTICLE AD BOX

பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளாரை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வென்று பாஜகவிடம் ஆட்சியை இழந்தது. பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைத்துள்ளது.

இதனிடையே, தில்லி தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தோல்வியை சந்தித்தார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் தோல்வி அடைந்தார்.

இதையும் படிக்க : ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!

பஞ்சாப் மாநிலத்தில் காலியாகவுள்ள லூதியானா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் மாநில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், லூதியானா மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோரா, லூதியானா மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவையில் சஞ்சய் அரோராவின் இடத்துக்கு அரவிந்த் கேஜரிவால் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article