பச்சிளம் குழந்தைக்கு 6 மாசத்துக்கு முன் தண்ணீர் கொடுக்கக் கூடாதுனு சொல்றது ஏன் தெரியுமா?

3 hours ago
ARTICLE AD BOX

புதிதாக பிறந்த குழந்தைக்கு 6 மாசத்துக்கு முன் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று மருந்துவர்கள் சொல்லுகிறார்கள். அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.

Risks Of Giving Water To Newborn Babies :  ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளின் நலன்களை பற்றி ரொம்பவே அக்கறைக் கொள்வார்கள். அதுவும் குறிப்பாக புதிதாக பிறந்த குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்? என்ன கொடுக்கக் கூடாது என்பதை குறித்த பல கேள்விகள் அவர்களுக்கு எழும். அந்த லிஸ்டில் தண்ணீரும் ஒன்று. ஆம், பச்சிளம் குழந்தைக்கு எப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். புதிதாக பிறந்த குழந்தைக்கு எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் கொடுக்கலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. ஆம், பச்சிளம் குழந்தைக்கு 6 மாசத்துக்கு முன் தண்ணீர் கொடுக்கவே கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

பச்சிளம் குழந்தைக்கு 6 மாசத்துக்கு முன் ஏன் தண்ணீர் கொடுக்கக் கூடாது?

உண்மையில் நாம் குடிக்கும் நீர், பழசாறு, குளிர்பானங்கள் அல்லது தண்ணீர் சார்ந்த பொருட்கள் என அனைத்தும், உடலில் உறிஞ்சப்பட்டு தேவையற்றதை சிறுநீர் வழியாக வெளியேற்றி விடும். சிறுநீரும் வேலையை செய்யும் ஒருவேளை தேவைக்கு அதிக தண்ணீர் குடித்தால் சிறுநீர் பணியானது அதிகரிக்கும் பிறகு சிறுநீர் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த காரணத்தினால் தான் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பச்சிளம் குழந்தைக்கு 6 மாசத்துக்கு முன் என்ன கொடுக்கலாம்?

புதிதாக பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். வேண்டுமானால், தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணத்தினால் ஃபார்முலா பால் குழந்தைக்கு கொடுக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் தண்ணீர் மட்டும் கொடுக்கக் கூடாது. 

இதையும் படிங்க: குழந்தையை குளிப்பாட்டும்போது இந்த '4' விஷயத்தை செய்ய மறக்காதீங்க!!

தாய்ப்பால் குடித்த பிறகு சிறுநீர் அதிக அளவு கழிப்பது ஏன்?

உண்மையில் குழந்தைகள் தாய்ப்பால் குடித்த பிறகு 15 முறைக்கும் மேல் சிறுநீர் கழிப்பார்கள். ஆனால், இது குறித்து பெற்றோர்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டாம் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். இது சாதாரணமான விஷயம் தான். அதாவது உடலுக்குள் செல்லும் பால் தேவையான அளவு உறிஞ்சப்பட்டு, மீந்திருப்பதை சிறுநீராக வெளியேற்றி விடும். எனவே, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஆபத்து அல்ல.

இதையும் படிங்க: பிறந்த குழந்தைகளை வைத்து போட்டோஷூட் செய்றது ஆபத்து..  குழந்தையோட ஆரோக்கியத்தையே பாதிக்கலாம்!! 

என்ன கொடுக்கலாம்.. கொடுக்க கூடாது?

- ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இளநீர் கொடுக்கலாம். இது தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக ஒரு அற்புதமான பானமாகும். இது குழந்தைகளுக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் உப்புச்சத்தை வழங்கும்.

- அதுபோல வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். இது தவிர, முழு பழங்களை கொடுக்கலாம். பழத்தில் இருக்கும் எல்லாவிதமான ஊட்டச்சத்துகளும் குழந்தைகளின் உடலுக்கு கிடைக்கும்.

- டீ காபி போன்றவற்றை கண்டிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது. இதனால் குழந்தைக்கு அடிக்கடி சிறுநீர்   கழிக்க தூண்டும். முக்கியமாக இது குழந்தையின் பசி உணர்வை குறைத்து விடும். இதன் காரணமாக எடை அதிகரிக்காமல் போய்விடும்.

Read Entire Article