ARTICLE AD BOX
பசும்பாலில் பேரிச்சம்பழம் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!
பசும்பால் இது உடலுக்கு பல ஆரோக்கியங்களை தரக்கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பசும்பாலை அருந்துவதன் மூலம் உடலில் ஏற்படும் ஆரோக்கிய பயன்கள் ஏராளம். தினமும் ஒரு டம்ளர் பசும்பால் குழந்தைகள் குடிப்பதன் மூலம் நல்ல பலனை பெறலாம். இந்நிலையில், பசும்பாலில் பேரிச்சம் பழம் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பசும்பாலில் இரண்டு அல்லது மூன்று வேக வைத்த பேரிச்சம் பழங்களை வெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் குணமாகும் . மேலும் இந்த பழத்தை கொட்டையோடு இடித்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி பிரச்சனையிலிருந்து விடுபடலாம். கண்பார்வை தெளிவாக இல்லாதவர்கள் தினமும் காலை மாலை என இருவேளையும் பேரிச்சம் பழத்தை பாலில் ஊற வைத்து சாப்பிட்டு வர கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வை தெளிவடையும். தாது விருத்தி ஆவதற்கு பேரிச்சம் பழத்தை இரவில் தூங்குவதற்கு முன்பு பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். இவ்வாறு பசும்பாலில் பேரிச்சம் பழம் ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. மேலும், பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை மட்டும் எடுத்து சாப்பிட்டு விட்டு பாலை குடித்து வர சளி இருமல் போன்ற பிரச்சனைகள் வராது.