பக்குவமடைந்த தலைவன் ரோஹித் சர்மா..! மனம் திறந்த ஷிகர் தவான்!

2 hours ago
ARTICLE AD BOX

முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி, அவருடனான நட்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

முன்னதாக ரோஹித், தவான் கூட்டணியில் கடந்த பத்தாண்டுகளாக சிறப்பாக விளையாடி வந்தார்கள். தற்போது ரோஹித் சர்மா இளம் வீரர்களுடன் சேர்ந்து நன்றாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஷிகர் தவான் கூறியதாவது:

2013லிருந்து 2015 வரை ரோஹித் சர்மா பல அனுபவங்களைப் பெற்றுள்ளார். அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி செயல்பட வேண்டுமென அவருக்குத் தெரியும். ஒரு தலைவனாக அவர் பக்குவமடைந்துள்ளார்.

வீரர்களுடன் இணக்கமாக பழகும் ரோஹித்

எப்போது இணக்கமாகவும் கடுமையாகவும் நடந்துகொள்ள வேண்டுமென்றும் அவருக்குத் தெரியும்.

ரோஹித் சர்மா வீரர்களுடன் பழகுவது அற்புதமாக இருக்கிறது. அது ஒரு நல்ல சமநிலையாக இருக்கிறது.

என்னை தொடக்க வீரராக இறங்க தோனி முடிவெடுத்தார். நான் அப்போது புதியதாக இருந்தேன். என்னுடய சொந்த உலகத்தில் இருந்தேன். கம்பேக் கொடுத்து நன்றாக விளையாட வேண்டிய சூழல் இருந்தது. ரோஹித்துடன் இறங்க வேண்டுமென இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

ரோஹித்துடன் நெடுங்கால நட்பு

முதல் போட்டியிலேயே 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். முதல் 10 ஓவர்களில் 30-35 ரன்கள் எடுத்தோம். பந்து திரும்பிக் கொண்டிருந்ததால் பொறுமையாக இருந்தோம். நாங்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவோமென நினைக்கவில்லை.

நாங்கள் ஒருவரையொருவர் நம்பினோம். இருவரும் நல்ல விதமாக பேசிக்கொள்வோம். ஆடுகளத்திலும் அதற்கு வெளியேவும் நாங்கள் ஒரே மாதிரி இருந்தோம். நாங்கள் ஒன்றாக விளையாடி பல தொடர்களை வென்றுள்ளோம்.

யு-19 கிரிக்கெட்டில் ரோஹித்துக்கு 16-17 வயதிலிருக்கும்போதே நாங்கள் ஒன்றாக விளையாடியுள்ளோம். அப்போதிலிருந்தே நாங்கல் நண்பர்களாக இருக்கிறோம் என்றார்.

Read Entire Article