ARTICLE AD BOX

தெலுங்கானா மாநிலத்தில் சங்கர ரெட்டி மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதியினர் இஸ்மாயில் மற்றும் ஷாஹீன் பிவி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் அலியா பேகம்(15). இவர் அப்பகுதியில் உள்ள உருது மொழி ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி பக்கத்து வீட்டுக்காரர் குடிபோதையில் பேகத்தை அடித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பேகத்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வேகம் பிப்ரவரி 16 அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். பேகம் இறந்ததை அடுத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர். இச்சம்பவம் குறித்து எஸ்.பி சி. ரரூபேஸ் கூறியதாவது,”இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையல்ல. பக்கத்து வீட்டு உடன் ஏற்பட்ட சிறிய பிரச்சனை பெரிய அளவில் மாறியுள்ளது. அதாவது பேகத்தின் தந்தை இஸ்மாயில் பக்கத்து வீட்டு வெளியில் அடிக்கடி சிறுநீர் கழித்துள்ளார்.
இதுகுறித்து அருகில் இருந்த குடியிருப்பாளர்கள் பேகத்தின் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று இரண்டு, மூன்று முறை தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கை கலப்பாக மாறியுள்ளது. இதில் குடி போதையில் இருந்த பக்கத்து வீட்டுக்காரர் சிறுமியை தாக்கியதால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இதுகுறித்து பேகத்தின் தாய் கூறியதாவது,”நாங்கள் அனைத்து மக்களுடனும் நல்லுறவாகவே இருந்தோம்.
ஆனால் குடித்துவிட்டு கோபத்தில் எனது மகளை இப்படி கொலை செய்ய அவர்களுக்கு உரிமை இல்லை. எங்கள் மகள் இனி எங்களிடம் வர முடியாது. குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் “என கூறினார். இதனை அடுத்து கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். அதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். பக்கத்து வீட்டு தகராரில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.