நேர்காணலின்போது பறந்த விமானம்…. வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்… இணையத்தில் வைரலாகும் அனுபவம்…!!

3 hours ago
ARTICLE AD BOX

பெங்களூரில் நடந்த ஒரு வேலை வாய்ப்பு நேர்காணலின் போது ஒருவருக்கு நடந்த அனுபவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, ஒரு நபர் வேலை வாய்ப்பு தேடி நேர்காணலுக்காக சென்றிருந்தார். அங்கு பணியமர்த்தும் மேலாளர் அவரிடம் சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது பதில் அளித்துக் கொண்டிருந்த அந்த நபர் வெளியில் விமானம் பறந்த சத்தம் கேட்ட நிலையில் தன்னை மறந்து அருகிலிருந்த கண்ணாடி சுவற்றின் வழியாக விமான பறப்பதை பார்த்தார்.

அதோடு பின்னால் சாய்ந்து விமானத்தை பார்க்க முற்பட்டபோது பதில் அளிப்பதில் கவனம் சிதறியதால் பணியமர்த்தும் மேலாளர் பேசுவதை நிறுத்திவிட்டார். அதன் பின் மேலாளர் அந்த நபரின் சகோதரரிடம் அவர் வேலைக்கு தகுதியற்றவர் என அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த நபரின் உடல் மொழியும், தன்னம்பிக்கையின்மையும், எதிர்கால திட்டங்கள் பற்றிய தெளிவின்மையும் தான் அவருக்கு வேலை வாய்ப்பு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்று மேலாளர் கூறியுள்ளார்.

இது இணையத்தில் வைரலான நிலையில் பல விவாதங்கள் எழுந்துள்ளது. சிலர் அந்த நபருக்கு ஆதரவாக விமானங்களுக்கான ஆர்வத்தை குறித்து பதிவிட்டிருந்தனர். இன்னும் சிலர் நேர்காணலின் போது தொழில் நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்பதால் உடல் மொழியும், கவனக் குறைவான அணுகுமுறையும் ஒருவரின் வேலை வாய்ப்பை பாதிக்கக்கூடிய முக்கிய காரணிகளாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article