நெல்லை: சுவரை நினைக்கும்போது இபி பாக்ஸை மாந்ததால் சோகம்; மின்சாரம் பாய்ந்து இருவர் பலி.!

9 hours ago
ARTICLE AD BOX

திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட கொக்கிரகுளம் பகுதியில், பழைய வீடு ஒன்றின் பகுதியை இடித்துவிட்டு, புதிய கட்டுமான அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று செங்கல் வைத்து கட்டுமான பணிகள் நடைபெற்றன.

மின்சாரம் தாக்கி சோகம்

இன்று கட்டுமானத்தை பலமாக்க மின் மோட்டார் கொண்டு நீர் தெளிக்கும் பணியில், இருவர் ஈடுபட்டனர். அப்போது, கட்டுமான பணி நடந்து வந்த இடத்தில், மின்சார பாக்ஸ் இருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை. இதனால் சுவரில் பாய்ந்த ஈரம் காரணமாக மின்சாரம் கசிந்து, இருவரும் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: #JustIN: வக்பு வாரிய முறைகேடுகளை எதிர்த்த முன்னாள் தலைமைக்காவலர் கொலை? நெல்லை கொலையில் அதிர்ச்சி தகவல்.!

பாளையில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் pic.twitter.com/Ld39yEucy2

— souryaabi (@souryaabi) March 18, 2025

இருவரும் மரணம்

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த கால்நடை பராமரிப்பாளர் சஞ்சய் ரவி (23), ஹாக்கி வீரர் வேலாயுதம் (46) ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

 

இதையும் படிங்க: #Breaking: ஓய்வுபெற்ற தலைமைக்காவலர் வெட்டிக்கொலை; நெல்லையில் பதற்றம்.!

Read Entire Article