ARTICLE AD BOX
நிறைய பேருக்கு பேசும்போது, மூச்சு விட்டாலோ வாய் துர்நாற்றம் வீசும் பிரச்சனை இருக்கும். இது பொது இடங்களில் நம்மை அசவுகரியமாக உணரச் செய்யும். அந்த பிரச்சனையிலிருந்து எப்படி விடுபடலாம் என்று டாக்டர் நித்யா தனது யூடியூப் பக்கமான நித்யாஸ்வரம் பக்கத்தில் பேசி இருப்பது பற்றி பார்ப்போம்.
இயற்கையான பொருட்கள் மூலமாகவே உடலில் உள்ள டாக்ஸின்ஸ்களை அகற்றி இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம் என்று கூறுகிறார்.
வயிற்றுப் பகுதியில் புண்கள் இருந்தால் வாய் துர்நாற்றம் வீசும். அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கும் வயிற்று பகுதியில் உள்ள வாயுவால் வாய் துர்நாற்றம் வீசும்.
செரிமான கோளாறு உள்ளவர்கள் மலச்சிக்கல் பிரச்சனைகள் உள்ளவர்களும் வாய் துர்நாற்றம் வீசும். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதாவது கபம் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் இது மாதிரி வாய் துர்நாற்றம் வீசும்.
அதிக வெயில், இரவு உறக்கம் இல்லை போன்றவர்களுக்கும் இந்த பிரச்சினை வரக் கூடும் எனவே முதலில் வயிற்றை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார் மருத்துவர் நித்யா.
நாட்டு மருத்துவத்தில் நிறைய மருந்துகளும் பொடிகளும் உள்ளது. அதனை மருத்துவரின் ஆலோசனையில் வாங்கி வெந்நீரில் கலந்து குடித்தாலும் சரியாகும் என்கிறார் மருத்துவர் நித்யா.
அதேபோல வெளியே செல்லும்போது வாயில் துர்நாற்றம் வருகிறது என்றால் கிராம்பு அல்லது நெல்லிக்காயை எடுத்து வாயில் போட்டு கொள்ளலாம். அதனால் தற்காலிகமாக வாய் துர்நாற்றம் நீங்கும். மேலும் இதனை தொடர்ந்து செய்யும்போது வாய்துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். இதே மாதிரி ஏலக்காயையும் வாயில் போட்டுக் கொள்ளலாம். இது வாய் துர்நாற்றத்தை போக்கி நல்ல மணத்தை கொடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.