ARTICLE AD BOX
தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலூர் வி.ஐ.டி கல்லூரியில் நுழைவுத் தேர்வு இல்லாமல் பொறியியல் படிப்பது எப்படி என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்.
வேலூரில் அமைந்துள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Vellore Institute of Technology) என்ற வி.ஐ.டி (VIT) இந்திய அளவில் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு பொறியியல் படிப்புகளில் சேர வி.ஐ.டி தனியாக நடத்தும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற வேண்டும். இந்த நுழைவுத் தேர்வை வருடந்தோறும் ஆயிரக்கணக்கானோர் எழுதி வருகின்றனர்.
இந்தநிலையில், வி.ஐ.டி கல்லூரியில் நுழைவுத் தேர்வு இல்லாமல் பொறியியல் படிப்பில் சேரலாம். அது எப்படி என்பது யு.கே.வி தமிழா என்ற யூடியூப் சேனலின் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
வி.ஐ.டி கல்லூரியில் எம்.டெக் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு (M.Tech 5 Years Integrated course) வழங்கப்படுகிறது. பொதுவாக பி.டெக் படிப்புக்கு 4 ஆண்டுகள், எம்.டெக் படிப்புக்கு 2 ஆண்டுகள் என மொத்தம் 6 ஆண்டுகள் தேவைப்படும். அதேநேரம் ஒருங்கிணைந்த படிப்பில் 5 ஆண்டுகளிலே எம்.டெக் படித்து விடலாம். இந்தப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
இந்தப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கிடையாது. மேலும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலே மாணவர் சேர்க்கை நடைபெறும். 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 70% மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி மாணவர்கள் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
எம்.டெக் கோர்ஸ்கள்
வி.ஐ.டி வேலூர்
1). எம்.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்
2). எம்.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் டேட்டா சயின்ஸ்
3). எம்.டெக் சாப்ட்வேர் இன்ஜினியரிங்
வி.ஐ.டி சென்னை
1). எம்.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் டேட்டா சயின்ஸ்
2). எம்.டெக் சாப்ட்வேர் இன்ஜினியரிங்
வி.ஐ.டி ஆந்திரா
1). எம்.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்
2). எம்.டெக் சாப்ட்வேர் இன்ஜினியரிங்
வி.ஐ.டி போபால்
1). எம்.டெக் ஆர்டிபிசியல் இண்டலிஜென்ஸ்
2). எம்.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் சைபர் செக்யூரிட்டி
3). எம்.டெக் சாப்ட்வேர் இன்ஜினியரிங் கம்ப்யூடேசனல் அண்ட் டேட்டா சயின்ஸ்