நீண்ட நாள் வாழ நினைப்பவர்கள் இந்தக் கீரையை மட்டும் ஒருபோதும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

3 hours ago
ARTICLE AD BOX

நீண்ட நாள் வாழ நினைப்பவர்கள் இந்தக் கீரையை மட்டும் ஒருபோதும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே கரிசலாங்கண்ணிக் கீரை என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த கரிசலாங்கண்ணியில் உள்ள மருத்துவ பயன்கள் ஏராளம். இந்நிலையில் கரிசலாங்கண்ணி கீரையை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

கரிசலாங்கண்ணி கீரையில் இரண்டு வகை உள்ளது ஒன்று மஞ்சள் கரிசலாங்கண்ணி இன்னொன்று வெள்ளை கரிசலாங்கண்ணி. இந்த இரண்டு வகை கீரையுமே உடலுக்கு ஆரோக்கியம் தரும். நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த கரிசலாங்கண்ணியை சாப்பிட வேண்டும். கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து அதை நசுக்கி பிழிந்து அதில் உள்ள சாறை இளநீரில் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அது மட்டும் இன்றி கல்லீரல் சம்பந்தமான நோய்களுக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது. மஞ்சள் கரிசலாங்கண்ணியை சாப்பிடுவதால் ரத்த புற்றுநோய் குணமாகும் என்று கூறப்படுகிறது.

Read Entire Article