நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

1 day ago
ARTICLE AD BOX

2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறவுள்ளது.

விருப்பமுள்ள மாணவர்கள் neet.nta.nic.in என்ற வலைத்தளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளை இறுதிநாள் வரை தாமதம் செய்யாமல், முன்கூட்டியே முடித்தால் கடைசி நேர சிரமங்களை தவிர்க்கலாம். ஒரு மாணவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நீட் தகுதித் தேர்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் மே 1-ம் தேதி வெளியிடப்படும். அதன் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

The post நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article