ARTICLE AD BOX
சாப்பிட்டவுடன் குளிக்கலாமா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாகவே சாப்பிட்ட உடன் குளிக்கக் கூடாது என நம் வீட்டில் இருக்கும் பெரியோர்களே சொல்வார்கள். அதாவது காலை உணவை தவிர்ப்பது, இரவில் சரியான நேரத்திற்கு தூங்காமல் டிவி, செல்போன் பார்ப்பது, இரவில் அதிகமாக சாப்பிடுவது, சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்வது போன்றவை உடலுக்கு எப்படி தீங்கு விளைவிக்குமோ அதேபோல் சாப்பிட்ட பின் குளிப்பதும் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
சாப்பிட்ட பிறகு நம் உடலானது வயிற்றுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி நாம் சாப்பிட்ட உணவுகள் செரிமானமடைய உதவி செய்கிறது. ஆனால் சாப்பிட்ட பின் குளிப்பதனால் வயிற்றுக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை செய்யப்படுகிறது. இதனால் உணவு ஜீரணிக்க தாமதமாகும் போது அது நம்முடன் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகளும், சோர்வையும் அதிகரிக்கக்கூடும். அதேபோன்றுதான் சாப்பிட்ட பின்னர் டீ குடிப்பதும் செரிமானத்தை கடினமாக்கும். எனவே குளித்த பிறகு ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடுவது நல்லது அல்லது குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.