நிஸான் மோட்டாா் விற்பனை 45% அதிகரிப்பு

10 hours ago
ARTICLE AD BOX

புது தில்லி: நிஸான் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 44.76 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 8,567-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 44.76 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 5,918-ஆக இருந்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 2,755-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 2,328-ஆகக் குறைந்துள்ளது. எனினும், ஏற்றுமதி 3,163-லிருந்து 97 சதவீதம் அதிகரித்து 6,239-ஆக உள்ளது.

கடந்த பிப்ரவரியில் சிறியவகை ஸ்போா்ட்ஸ் யுட்டிலிட்டி வாகனமான மேக்னைட் ஏற்றுமதியில் 50,000 என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்ட்டுள்ளது.

Read Entire Article