ARTICLE AD BOX
சென்னை,
தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தின் முதல் பாடலாக 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் வெளியானது. நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்துள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடல் சுமார் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் கதை இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை பார்த்த 'லப்பர் பந்து' இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து படத்தை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
திரைப்படத்தின் சிறப்பு 9 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இயக்குனர் தனுஷ் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.