ARTICLE AD BOX
நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன்.. அவர் மாதிரிலாம் முடியாது.. ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்
சென்னை: ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் கடைசியாக அமரன், லக்கி பாஸ்கர், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் வந்தன. அதில் இடம்பெற்ற இசை பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நடிக்க சென்றதால் அதிக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்துவந்த ஜிவி பிரகாஷ் இப்போது மீண்டும் இசையமைப்பில் பிஸியாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதேசமயம் நடிப்பையும் அவர் விடவில்லை. அந்தவகையில் அவர் நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ்; தனது முதல் படமான வெயில் படத்திலேயே தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதற்கு பிறகு தொடர்ந்து அவர் இசையமைத்த படங்கள் அனைத்திலும் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. ஃபோக், மெலோடி, வெஸ்டர்ன் என எந்த ஜானரை எடுத்துக்கொண்டாலும் தன்னுடைய முத்திரையை அவர் பதித்ததன் காரணமாக குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளர் என்ற இடத்தை அடைந்தார் அவர்.

ஹீரோ ஆசையில் ஜிவி: ஜிவி பிரகாஷின் ஒவ்வொரு படத்தின் வேலையையும் கவனித்த ரசிகர்கள் அவருக்கு தகுந்த அங்கீகாரம் இன்னமும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை தொடர்ந்து கொட்டிக்கொண்டே வந்தார்கள். ஆனால் ஜிவியோ தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்திவந்தார். சூழல் இப்படி இருக்க சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருதை வென்று அசத்தினார் அவர். இதற்கிடையே ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசை அவருக்கு வர; டார்லிங் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ்.
பெரிய ஹிட் இல்லை: இசையமைப்பில் தனது தாக்கத்தை செலுத்த முடிந்த அளவுக்கு நடிப்பில் ஜிவி பிரகாஷால் செலுத்த முடியவில்லை. அவரது நடிப்பில் வெளியான படங்களில் சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம், பேச்சிலர் உள்ளிட்ட படங்கள் மட்டுமே அவருக்கு ஓரளவு நல்ல பெயரை கொடுத்தது. பாலாவின் இயக்கத்தில் நடித்த நாச்சியார் படம்கூட பெரிதாக எடுபடவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தும் அவர்; இப்போது அதிக படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார்.
தைரியமில்லாத கதாநாயகன்.. காசு இல்லாத புரொட்யூசர்.. அஜித் அந்த படத்தை மறுபடியும் பார்க்கணுமாம்!
களமிறங்கிய ஜிவி: அந்தவகையில் அவர் அசுரன், அமரன், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி, விக்ரம் நடித்திருக்கும் வீர தீர சூரன் படத்துக்கு இசையமைக்கும் அவர்; அன்பறிவ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படத்துக்கும் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே காதலித்து திருமணம் செய்துகொண்ட சைந்தவியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார்.
ஜிவி பிரகாஷ் பேச்சு: இசையமைப்பில் மீண்டும் ஜிவி பிஸியானாலும் நடிப்பதையும் விடவில்லை. அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் கிங்ஸ்டன் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "நான் சிறு வயதாக இருந்தபோதே சினிமாவில் பாட ஆரம்பித்துவிட்டேன். அதற்கு பிறகு இசையமைப்பாளராகி ஒரு இடத்தை பிடிப்பதற்கு நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன். படங்களில் நடித்தும்வருகிறேன். தனுஷ் எல்லாம் ஒரு சிறந்த நடிகர். அவர் அளவுக்கெல்லாம் என்னால் நடிக்க முடியாது" என்றார்.
வடிவேலு வாயில் விரலை விட்டு ஆட்டிய பிரபுதேவா.. தனுஷும் மகனும் என்ன பண்றாங்கனு பாருங்க.. ஆத்தி!