ARTICLE AD BOX

பாரதி ராஜா நடித்துள்ள 'நிறம் மாறும் உலகில்' படத்தின் 2 வது பாடல் 'போய் வாடி' வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது.
வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'ரங்கம்மா' வெளியாகி மக்கள் மத்தியில் கவனம் பெற்றன.
Through every joy 🤍 and every sorrow 🖤 you’ve been my forever ♥️#PoiVaadi 2nd Single from #NiramMarumUlagil out now
Watch Now: https://t.co/dmRQtwmjSb
A @DevPrakash2816 🎼 Musical 🎶
Sung by 🎙️ #Ananthu
Lyrics by ✍️ #ASDawood#NiramMarumUlagilFromMarch7 pic.twitter.com/HifEzLXpVA
அதனை தொடர்ந்து இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.தேவ் பிரகாஷ் ரேகன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான 'போய் வாடி' வெளியாகியுள்ளது. ஏ.எஸ். தாவூத் எழுதிய இந்தப் பாடலை அனந்து பாடியுள்ளார்.