நிர்மலா சீதாராமன் இருமொழிக் கொள்கை தான் படித்தார் - ஆர்எஸ் பாரதி பேச்சு!

9 hours ago
ARTICLE AD BOX

சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் கிழக்கு பகுதி 49வது வட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலுத்தட்ட உதவிகள் வழங்கும் விழா, வட்டச் செயலாளர் கலைச் செல்வம் தலைமையில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ ட்ரீம் மூர்த்தி, பகுதி செயலாளர்கள் செந்தில்குமார் வாபே சுரேஷ் முன்னிலையில் பாலு முதலி தெருவில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர் டி சேகர் எம்எல்ஏ கலந்துகொண்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் இளைய அருணா நாம் மனோகரன் மாநில நிர்வாகிகள்பாண்டிச்செல்வம் மருது கணேஷ் உள்பட மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்த்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க - ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது? முக்கிய பங்களிக்கும் DR, முழு கணக்கீடு இதோ

இந்த கூட்டத்தில் பேசிய கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, இந்தியாவிலேயே எந்த அரசும் செய்ய முடியாத சாதனைகளை  தலைவர் முக ஸ்டாலின் நான்காண்டு காலத்தில் செய்து முடித்து இருக்கிறார். நான்காண்டு காலத்தில் பெண்களுக்கான நிறைவேற்றி இருக்கிற திட்டங்கள் பெண்கள் முன்னேற்றத்திற்காக தளபதி முன்னுரிமை கொடுத்திருப்பதால், தமிழ்நாட்டில் பெண்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பதை புள்ளிவிவரத்தோடு எடுத்துச் சொல்ல வேண்டும். இதனை தாங்கிக் கொள்ள முடியாத சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியில் உட்கார்ந்து இருக்கிற எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியில் இருந்தபோது, தமிழ்நாட்டு மக்களுக்கு எதையும் செய்யாத காரணத்தினால் தாங்கள் பெண்களுக்கு செய்வதை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் பொறாமையின் காரணமாக நம் மீது புழுதி வாரி தூற்றுகிறார்.

தமிழ்நாட்டில் மு க ஸ்டாலினுக்கு நிகரான தலைவர் யாருமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது. நம்மை எதிர்த்து எத்தனை பேர் நின்றாலும் சரி தனித்தனியாக நின்றாலும் சரி கூட்டாகும் என்றாலும் சரி நூற்றுக்கு 54 சதவீத வாக்கு மு க ஸ்டாலின் தான் கிடைக்கும் என்று திட்டமிட்டு சொல்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு முறைக்கு எட்டு முறை மோடி வந்தார். எட்டு முறை வந்தாலும் 80 முறை வந்தாலும் உனக்கு ஒரு இடம் கூட இல்லை என்று தமிழ்நாட்டு மக்கள் விரட்டி அடித்தார்கள், அதன் காரணமாக நமக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்காமல் ஒன்றிய மோடி அரசு எப்படியாவது தமிழ்நாட்டை பழிவாங்க வேண்டும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

நாம் நிதியை கேட்டால் ஒன்றிய நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் திமிராக பேசுகிறார், நீங்கள் இந்தி படித்தால் தான் பணம் தர முடியும் என்று எவ்வளவு திமிர் ஆணவம் கொழுப்பு சொல்கிறார். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து படித்து, ஆந்திராவில் திருமணம் செய்து, கர்நாடகாவில் எம்பி ஆகி இன்று நிதி அமைச்சராக இருக்கக்கூடிய நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் சொல்கிறார். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தமிழில் படித்தால் பிச்சை எடுக்க கூட உதவாது என்று சொல்கிறார். வடநாட்டில் இருந்து வந்து நாம் போடும் பணத்தில் ரோட்டில் டீ சாப்பிட்டு விட்டு பானிபூரி விற்று பிழைப்பு நடத்துகிறார். ஒவ்வொரு சிக்னல்லையும் நிற்பது ஹிந்திக்காரர்கள் எல்லாம் ஒவ்வொரு டிராபிக் சிக்னலிலும் கை குழந்தையுடன் பிச்சை எடுப்பது தமிழ்நாட்டு பெண்ணில்லை, தமிழ் நாட்டு பெண்களை பிச்சை எடுக்காமல் பார்த்துக் கொள்வதற்கு மு க ஸ்டாலின் இருக்கிறார்.

உங்கள் ஊர்களில் அப்படி இல்லாத காரணத்தினால் திருட்டு ரயிலில் வந்து எங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நிர்மலா சீதாராமன் இவ்வளவு திமிராக பேசுகிறார், அதிமுக காரர்களுக்கு சொரணை வரவில்லை. இருமொழிக் கொள்கையில் தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை. இன்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஒன்று வந்து கொண்டிருக்கிறது, அதில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்த காலத்தில் 2018 ஆண்டு பேசும்போது தமிழ்நாட்டில் இந்தி படித்தால் தான் வாழ முடியும் என்கிறார். மும்மொழி கொள்கை என்றால் இந்தி படிக்க மட்டுமல்ல மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு தேர்வு எழுத வேண்டும்.  அதில் தோல்வி அடைந்தால் கலெக்டர் வேலை செய்ய முடியாது மாடு மேய்க்க தான் செல்ல வேண்டும்.

அண்ணாதுரை கொண்டு வந்த இரு மொழி கொள்கை காரணமாக தான் ஆங்கிலத்தை சரளமாக பேசுகிறார்கள். நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பதவி கொடுத்தது பொருளாதார மேதை என்பதற்காக கொடுத்தார்களா? பாஜகவில் யாருக்கும் ஆங்கிலம் பேச தெரியாது மோடிக்கு தெரியாது.  அமெரிக்காவில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ஆங்கில படம் பார்த்த மாதிரி தலையாட்டி விட்டு வந்து விட்டார். நம்ம ஊரு காரர் சென்று இருந்தால் பத்திரிக்கையாளரை ஒழுங்காக பார்த்திருப்பார் இதுதான் இன்று அவர்களுடைய நிலைமை. பாஜகவில் யாருக்கும் ஆங்கிலம் செல்லமாக பேசத் தெரியாது, ஒருவர் மட்டும் இருந்தார். அவர் நமது ஊரை ஒட்டி உள்ள சித்தூர் காரைச் சேர்ந்த வெங்கய நாயுடு அவரது ஆங்கிலம் சிறப்பாக இருக்கும் அதே போல் அருண் ஜெட்லி இறந்து போயிட்டார்.

இன்று நிதியமைச்சராக இருக்கிற தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை படித்த காரணத்தினால் தான் இன்று நிதி அமைச்சராக சீதாராமன் இருக்கிறாரே தவிர வேற தனிப்பட்ட தகுதி எதுவும் இல்லை. இந்தி எழுத்து ரூபாய் கண்டுபிடித்து தமிழில் ரூ என்று போட்டவுடன் இவ்வளவு குதிக்கிறார்கள் ஒரு வார்த்தை மாற்றியதற்கு இவ்வளவு  ஆத்திரப்படுகின்ற நிர்மலா சீதாராமன். திமுகவை 75 ஆண்டு காலமாக எவனாலும் தொட்டுப் பார்க்க முடியாத காரணம் என்ன என்ன காரணம் நாம் எல்லோரும் வாழ வைக்கிறோம் எல்லா சமுதாயத்திற்கும் ஏணியாக நிற்கிறோம். குறிப்பாக கலைஞர் மட்டும் இல்லாமல் இருந்தால் இந்த நாடு இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று இருக்குமா, அதேபோல் இன்று தளபதி மு க ஸ்டாலின் இருக்கிறார் என்று பேசினார்.

மேலும் படிக்க - ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம், 20%-100% பென்ஷன் உயர்வு: அரசு உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read Entire Article