ARTICLE AD BOX
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி துபாயில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவர்களில் போராடி 251-7 ரன்கள் குவித்தது.
வில் எங் 15, கேன் வில்லியம்சன் 11, டாம் லாதம் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 63, கிளன் பிலிப்ஸ் 34, மைக்கேல் பிரேஸ்வெல் 53* ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா அசத்தல்:
அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணிக்கு இரண்டாவது பந்திலேயே சிக்சரை பறக்க விட்ட ரோஹித் சர்மா அதிரடியாக ரன்கள் குவித்தார். அவருக்கு எதிர்ப்புறம் நிதானமாக விளையாடி கை கொடுத்த சுப்மன் கில் 105 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்த போது 31 ரன்னில் கிளன் பிலிப்ஸ் சூப்பர்மேன் கேட்ச்சில் அவுட்டானார். அடுத்ததாக வந்த விராட் கோலி 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
இருப்பினும் மறுபுறம் அட்டகாசமாக விளையாடிய ரோஹித் சர்மா இந்தத் தொடரில் முக்கிய நேரத்தில் அரை சதத்தை அடித்தார். தொடர்ந்து அசத்திய அவர் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 76 தண்ணீர் ஆட்டமிழந்தார். அடுத்ததாக நான்காவது இடத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது நல்ல ஃபார்மை பயன்படுத்தி 106 மீட்டர் சிக்ஸர் உட்பட முக்கியமான 48 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இந்தியாவின் சரித்திரம்:
அவருடன் இணைந்து விளையாடிய அக்சர் பட்டேல் தனது பங்கிற்கு 29 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேஎல் ராகுல் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் பாண்டியா அதிரடி காட்ட முயற்சித்து 18 ரன்னில் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 9*, தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் 34* ரன்கள் எடுத்ததால் 49 ஓவரிலேயே 254-6 ரன்களை எடுத்த இந்தியா 4 வித்தியாசத்தில் போராடி வென்றது.
இதையும் படிங்க:
இதன் வாயிலாக நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் ஃபைனலில் வெற்றி பெற்று இந்தியா புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன் 2002 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் அந்த அணியிடம் இந்தியா தோல்வியையே சந்தித்தது. அதை விட 3 சாம்பியன்ஸ் ட்ராபிகளை வென்ற முதல் அணி என்ற மாபெரும் சரித்திர உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது இதற்கு முன் ஆஸ்திரேலியா 2 கோப்பைகளை வென்றதே முன்பே சாதனை மறுபுறம் நியூசிலாந்துக்கு மைக்கேல் பிரேஸ்வெல், கேப்டன் சான்ட்னர் தலா 2 விக்கெட் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
The post நியூஸிலாந்தை சாய்த்து 25 வருட மோசமான வரலாற்றை மாற்றிய இந்தியா.. சரித்திரம் காணாத உலக சாதனை appeared first on Cric Tamil.