நிமோனியாவால் பாதிப்பு; ஆபத்தான நிலையில் இருந்து போப் மீண்டு விட்டார்: வாடிகன் தகவல்

12 hours ago
ARTICLE AD BOX

ரோம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டு விட்டதாக வாடிகன் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ்(88) கடந்த 14ம் தேதி முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் சுவாச குழாய் பாதிப்பு மற்றும் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது.

மேலும் கடந்த பிப்ரவரி 23ம் தேதி போப் பிரான்சிஸ்க்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் கடந்த 3ம் தேதி போப் பிரான்சிஸ்க்கு மீண்டும் மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் 3 வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் போப் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் போப் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார் என வாடிகன் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு போப் நன்றாக உறங்கினார். ஆனால் போப் பிரான்சிஸ் இன்னும் பல நாள்கள் சிகிச்சை பெறுவது அவசியம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

The post நிமோனியாவால் பாதிப்பு; ஆபத்தான நிலையில் இருந்து போப் மீண்டு விட்டார்: வாடிகன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article