நிமிடங்களில் தயாராகும்  வெற்றிலைப் பூண்டு சாதம் நன்மைகள்; ரெசிபி இதோ!

4 hours ago
ARTICLE AD BOX

வெற்றிலை மற்றும் பூண்டு இரண்டிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன. இப்போது இவை இரண்டையும் கொண்டு சுவையான சாதம் செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கிராம்பு - 2 
பட்டை - சின்னது
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 10
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - சிறிதளவு
வெற்றிலை - 7
சாதம் - 1 கப்
கொத்தமல்லி இலை - சிறிதளவு

இதையும் படிங்க:  சாப்பிட்ட பின்னர் வெற்றிலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அதில் மிளகு, சீரகம், கிராம்பு, பட்டை ஆகியவற்றை போட்டு நன்றாக வறுக்கவும். பிறகு அதை அரைத்து பின் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் மீண்டும் அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் அடுத்ததாக அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் நறுக்கிய பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பூண்டு நன்றாக வதங்கியதும் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இப்போது அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். அடுத்ததாக அதில் நறுக்கி வைத்துள்ள வெற்றிலையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். இறுதியாக எடுத்து வைத்த ஒரு கப் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். பின் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான வெற்றிலை பூண்டு சாதம் தயார்.

இதையும் படிங்க:  கமகமன்னு மணக்கும் பூண்டு சாதம்.. ஒருமுறை செஞ்சு பாருங்க.. ருசியா இருக்கும்!

நன்மைகள்:

- இந்த சாதத்தை அடிக்கடி உங்களது குழந்தைகள் நீங்கள் செய்து கொடுத்தால் அவர்களுக்கு சளி, காய்ச்சல் இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.

- செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

- வாய் துர்நாற்றத்தை போக்கும் மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

- வாயு தொல்லையைப் போக்கும். கல்லீரல், மண்ணீரல், இதயம் மற்றும் மூளை போன்றவற்றை ஆரோக்கியமாக வைக்கும்.

- ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.

- குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும்.

Read Entire Article