ARTICLE AD BOX
ஐதராபாத்: நிதின் ஜோடியாக நடிக்க இருந்த தெலுங்கு படத்திலிருந்து சாய் பல்லவி விலகியுள்ளார். ‘பலகம்’ தெலுங்கு படத்தை இயக்கியவர் வேணு எல்டண்டி. இவர் அடுத்ததாக நானி நடிப்பில் ‘எல்லம்மா’ என்ற படத்தை இயக்க இருந்தார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதை என்பதால், கதை கேட்ட பிறகு நானி நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து இதில் நடிக்க நிதின் தேர்வானார். இதில் ஹீரோயினாக நடிக்க வேணுவின் ஒரே சாய்ஸ், சாய் பல்லவிதான்.
அவரிடம் கதை சொல்லி சம்மதமும் வாங்கியிருந்தார். ஆனால் இப்போது திடீரென படத்திலிருந்து சாய் பல்லவி விலகியுள்ளார். இந்தியில் உருவாகும் ‘ராமாயணா’ படத்தில் சீதையாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்த படத்தின் 2வது பாகத்துக்கு கூடுதல் தேதிகள் ஒதுக்கி நடிக்க வேண்டியிருப்பதால் ‘எல்லம்மா’ படத்திலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து வேறொரு ஹீரோயினை நடிக்க வைக்க இயக்குனர் வேணு முயற்சித்து வருகிறார்.