நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு சம்மந்தம் இல்லை… கனடா அரசு ஆணையம் உறுதி..!!

3 hours ago
ARTICLE AD BOX

கனடாவில் காலிஸ்தான் அமைப்பின் தலைவராக இருந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதில் இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா மறுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து நிஜ்ஜார் கொலை மற்றும் கனடா தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடுகள் தொடர்பாக விசாரிக்க கனடா அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த ஆணையம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கை 123 பக்கங்களை கொண்டதாகும். இதில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் நிஜ்ஜார் கொலை வழக்கில் வெளிநாட்டுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவரது கொலை வழக்கில் இந்தியாவுக்கு சம்பந்தம் இருப்பதாக கனடா பிரதமர் கூறியதை அடுத்து, சிலர் நாட்டில் திட்டமிட்டு தவறான செய்திகளை பரப்பினர். இது குறித்து விசாரிக்கப்பட்டதில் இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று கனடா நாட்டு ஆணையமே உறுதி அளித்துள்ளது.

Read Entire Article