ARTICLE AD BOX

இந்தியாவில் நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் பல நாட்கள் நடைபெறும். அதில் நடனங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. சமீபத்தில் ஒரு வினோதமான நாகினி நடன வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவில் இளைஞர் மற்றும் அவரது உறவினர் இணைந்து வித்தியாசமான நாகினி நடனத்தை ஆடுகின்றனர். இந்த நடனம் பார்ப்பவர்களை அதிசயத்திலும், சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
அதில் அந்த இளைஞன் தன்னை பாம்பாக கற்பனை செய்து புல்லாங்குழல் இசைக்கிணங்க ஆடுகிறார். ஆனால் அவருடன் நடனமாடிய அவரது உறவினர் தான், அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது அசைவுகள் மற்றும் உணர்வுகள் அனைத்தும் நிஜமான பாம்பை போல இருந்தது. இதனால் இந்த நடனம் வேகமாக வைரல் ஆனது. இதற்கு இணையவாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.