நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க...

5 hours ago
ARTICLE AD BOX

- முத்துலக்ஷ்மி சங்கரன், சென்னை

சுறுசுறுப்பில்லாமல் இருக்கிறதா? 'தூக்கமில்லை சரியாக, அதுதான்...' என்று காரணம் சொல்கிறீர்களா? இருக்கலாம். ஆனால், வேறு சில காரணங்களாலும் அயர்ச்சி ஏற்படலாம். உடல் சோர்வாக உணரலாம். அவை இதோ...

காலை உணவு

பரேக் ஃபாஸ்டைத் தியாகம் செய்யவே கூடாது. உடம்பில் தேவையான எரிபொருள் இல்லாமல் போய்விடும். காலை உணவிலுள்ள கார்போஹைரேட்ஸ் மூளையைத் தூண்டி ஸெடோனின் சுரக்க வழி வகுக்கும்.

எனவே காலை உணவில் மாவுச்சத்து இருக்க வேண்டும். கூடவே ஐந்து கிராம் புரோட்டினும் இருப்பது அவசியம். இதயத்தை அலெர்ட்டாக வைக்கும் நியூரோ கெமிகல்கள் அப்போதுதான் கிடைக்கும்.

அணிமணிகள்

குதி உயர்ந்த காலணிகள், பேன்ஸில் ஹீல்ஸ், இறுக்கமான உடை இவற்றுடன் வேகமாக வேலை செய்ய முடியாது. சக்தியைக் குறைவாகச் செலவழித்தால் நம் உடலில் சக்திய குறைவாகவே இருக்கும். மேலும் நாற்காலியிலே உட்கார்ந்துகொண்டே இருந்தால் செல்களுக்கு ஆக்ஸிஜன் குறைவாகத்தான் கிடைக்கும்.

எனவே தளர்வான உடை, இதமான காலணிகள் அணிவது நல்லது. 'ஹை ஹீல்ஸ்தான் தேவை' என்று பிடிவாதமாக இருந்தால், அதைப் போட்டுக்கொள்ளுங்கள். மதிய இடைவேளையில் ஹைஹீல்ஸ் செருப்புகளை அவிழ்த்து வைத்துவிட்டு சாதாரணச் செருப்புகளை அணிந்து நடக்கலாம்.

காஃபி பழக்கம்

மூன்று மணி வாக்கில் ஒரு காஃபி  குடித்தால்... அடடா... மிச்ச நாள் ரொம்பவே சுறுசுறு.. ஆனால் எட்டு மணி நேரம் வரை 'காஃபின்' உடலில் இருக்கும்.

எனவே ஒரே ஒரு மடக்கு காஃபியுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு எட்டு மணிநேரம் முன்பு காஃபியை நிறுத்தி விட வேண்டும்.

கவலைப்படுதல்

கடுகடுக்கும் பாஸ், துரத்தும் கடன்கள், வீட்டுத் தொல்லை, வேலைக்காரி, உடல் நிலை, குழந்தைகள் லூட்டி இவை 'ஸ்ட்ரெஸ்' எனும் மன அழுத்தத்தைத் தரும். ப்ளட் பிரஷர் எகிறும். உடல் ஓவர் டைம் செய்யும். தசைகள் முறுக்கேறும். அயர்ச்சி தொடரும். ஆக்ஸிஜன் இல்லாமல் போய் கார்பன் - டை -ஆக்ஸைடு உடலில் தங்கும்.

எனவே, மன இறுக்கம் ஏற்படும்போது மூன்று முறை ஆழ்ந்த மூச்சு விடுங்கள். சந்தோஷமான விஷயங்களில் மனத்தைச் செலுத்துங்கள். சிநேகிதியுடன் பேசுங்கள். டீ.வியில் காமெடி காட்சிகள் பாருங்கள். (அழுகை சீரியல் வேண்டாம்!)

இதையும் படியுங்கள்:
சிறுகதை: உறவின் பின்னல்!
Stay active all day long...

களேபரமான வீடு

வீட்டைக் கசமுசாவென்று வைத்திருக்கிறீர்களா? உங்களது அலுவலக மேஜையையும்தான்.... எது வேண்டுமென்றாலும் குப்பைக்குள் தேட வேண்டுமா? எதையும் ஒழுங்குமுறையாக வைக்கவில்லை என்றால் உங்களது வேலை செய்யும் திறமை குறைந்துவிடும் என்பதை நினைவில் வையுங்கள்.

கொஞ்சம் இப்படி, அப்படி இருந்தால் ஓ.கே... ஆனால் முக்கியமான பொருள்களை பத்திரப்படுத்துங்கள். நாளின் முடிவில் டெஸ்க்கை அழகாக அடுக்குங்கள் அல்லது ஃபைல் பண்ணுங்கள். வீட்டிலும் பொருள்களை அதனதன் இடத்தில் சிரமத்தைப் பார்க்காமல் அவ்வப்போது வைத்து விடுங்கள்.

வார இறுதி ஓய்வு நேரம்

வெள்ளி மாலை 'அப்பாடா' என்று மூச்சு விடுகிறீர்களா? இரவு வெகுநேரம் கண் விழித்து வீக் எண்ட்'டை கொண்டாடுகிறீர்களா? சனி, ஞாயிறுகளில் லேட்டாக எழுந்துகொள்கிறீர்களா? நம் உடலில் Circadian Rhythm எனப்படும் 24 மணிநேர கடிகாரம் உள்ளது. லீவு நாளில் லேட்டாக விழித்திருந்து மறுநாள் தாமதமாக எழுவது திங்கட்கிழமையன்று சுறுசுறுப்பாக இருக்க உதவாது.

கொஞ்சம் லேட்டாக முன்னே பின்னே முதல்நாள் தூங்கினாலும் மறுநாள் காலை ஒருமணி நேரத்துக்கு மேல் எக்ஸ்ட்ரா தூக்கம் வேண்டாம். எழுந்திருக்கும்போது சுறுசுறுப்பாக இல்லாமல் தூக்கக் கலக்கமாக இருந்தால் படுக்கையறையின் திரைகளை நன்கு விலக்கி 'பளிச்' என்று சூரிய ஒளி பரவுமாறு வையுங்கள்.

வைட்டமின் 'சி' பற்றாக்குறை

சுமார் முப்பது சதவிகிதம் பெண்களுக்கு வைட்டமின் சி குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி சொல்கிறது. கார்னி டைன் (Cami-tine) எனும் மாலிக்யூல்கள், கொழுப்புகளைக் கரைத்து சக்தியாகச் செலவிட நம் உடலுக்கு உதவுவது இந்த வைட்டமின் 'சி'தான். அது இல்லாதபோது கார்போஹைடிரேட்டுகள், புரோட்டீன்களை எல்லாம் எரித்து உடலுக்கு எரிபொருளை அளிக்கும்போது லாக்டிக் ஆஸிட் எனும் கழிவுப் பொருள் உற்பத்தியாகி, உடல் தசைகளைக் களைப்படைய வைக்கிறது.

தினசரி நம் உடலுக்கு 75 மி.கி அளவு வைட்டமின் சி தேவை. அதனால் பழங்களைத் தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்வது மிக அவசியம்.

செக்கு மாட்டு ரொடீன்

வாழ்க்கையில் அன்றாடம் சிறு சிறு மாறுதல்கள் தேவை. வேலைகளில் கொஞ்சமாவது 'சாலஞ்ஜ்' இருக்க வேண்டும். இல்லாவிடில் 'ஆட்டோ பைலட் டில் போட்ட மாதிரி ஆகிவிடும்.

உங்கள் மேலதிகாரியிடம் சொல்லி, வேலையில் சிறு மாற்றம் செய்துகொள்ளுங்கள். அடுத்த டிபார்ட்மெண்டில் ஃப்ரெண்ட் பிடித்து மதிய உணவு நேரத்தை மகிழ்ச்சிகரமாக்குங்கள். தினம் டிரெயினில் போனால் ஒருநாள் பஸ்ஸில் போங்களேன். வீட்டு வேலைகளிலும் இது போலவே சில மாற்றங்களைக் கொண்டு வாருங்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மனதினுள் பெய்யும் மாமழை!
Stay active all day long...

மாதவிடாய் நாட்கள்

ஹெவி பீரியட் நாட்கள் உடலில் இரும்புச்சத்தைக் குறைவாக்கி விடலாம். அதனால் சிவப்பணுக்கள் இரத்தத்தில் குறைவாகி, ஆக்ஸிஜனை செல்களுக்கு எடுத்துச்செல்வது குறையும்.

எனவே, நல்ல தூக்கம் இருந்தாலும், டயர்டாக உணர்ந்தால் மருத்துவரைப் பார்க்கவும். அவர் இரும்புச் சத்துள்ள மாத்திரைகளைப் பரிந்துரைப்பார். உணவிலும், கீரை, பீன்ஸ் முதலியவற்றை அதிகம் சேர்த்துகொள்ளவும்.

அயர்ச்சி, சோர்வு, சுறுசுறுப்பின்மை எனும் அறிகுறிகளை அலட்சியப் படுத்தாமல் அதற்குரிய காரணத்தைக் கண்டறிந்து செயல்பட்டால் உடல் நலனைப் பாதுகாக்கலாம்.

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் ஆகஸ்ட் 2010 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Read Entire Article