நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. விவரம் இதோ!!

2 hours ago
ARTICLE AD BOX

நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. விவரம் இதோ!!

 

கிழக்குக் காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழை வரும் மார்ச் 2ம் தேதி வரையிலும் நீட்டிக்கலாம் எனவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

follow our Instagram for the latest updates

The post நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. விவரம் இதோ!! appeared first on EnewZ - Tamil.

Read Entire Article