நாளை ரிலீஸாகும் 10 படங்களில், சிம்பு பார்த்த படம்; அவர் பதிந்த தகவல்..

4 days ago
ARTICLE AD BOX
pradeep ranganathan in dragon movie first review is silambarasan

நாளை 10 படங்கள் ரிலீஸாகிறது. இதில், எந்த படத்தை முதலில் பார்ப்பது என தேர்ந்தெடுப்பது அவரவர் ரசனையை பொறுத்தது. மேலும், இது தொடர்பாக வைரலாகி வரும் தகவல்கள் காண்போம்..

தமிழ் சினிமாவில் ‘லவ் டுடே’ வெற்றியை தொடர்ந்து பிரதீப் கவனிக்கப்படும் முக்கிய நடிகராக மாறியுள்ளார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ உள்பட 10 படங்கள் நாளை ரிலீஸாகிறது.

நாளை ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸாக இருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘டிராகன்’ படங்கள் தான்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்த ‘டிராகன்’ படம் பார்த்த சிம்பு இப்படம், “பிளாக் பஸ்டர்” என விமர்சனம் கொடுத்துள்ளார்.

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் மூலம், தனுஷின் அக்கா மகன் பவிஷ் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில், சிம்பு, ‘டிராகன்’ படத்தை ‘பிளாக்பஸ்டர்’ என பாராட்டியவர், தனுஷ் இயக்கிய படம் பற்றி ஏதும் தகவல் தெரிவிக்கவில்லை. முன்னதாக, சிம்புவுக்கு படம் பார்க்க அழைப்பு வரவில்லையோ என நெட்டிசன்ஸ் கேட்டு வருகின்றனர்.

‘டிராகன்’ படத்தை விமர்சித்து சிம்பு ட்வீட் செய்கிறார். வழக்கமாக இப்படி விமர்சன ட்வீட் போடும் இசையமைப்பாளர் அனிருத் ஏன் அமைதியாகி விட்டார் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்குள் வெளியில் தெரியாத உள்குத்து வேலை ஏதும் இருக்குமோ எனவும் இணையத்தில் பரவும் கமெண்ட்ஸ் வைரலாகி வருகிறது.

pradeep ranganathan in dragon movie first review is silambarasanpradeep ranganathan in dragon movie first review is silambarasan

 

The post நாளை ரிலீஸாகும் 10 படங்களில், சிம்பு பார்த்த படம்; அவர் பதிந்த தகவல்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article