நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

3 hours ago
ARTICLE AD BOX

நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். வாய்ப்புள்ளோர் நேரில் வருகை தாருங்கள் என்றும்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிடுகிறார். தொடர்ந்து, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி,  கீழடி இணையதளத்தையும் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவை டேக் செய்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது என்று அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள் என்றும், மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read Entire Article