நாளை மகா சிவராத்திரி! கண் விழிப்பது எப்போது? விரதமிருக்கும் முறை தெரியுமா?

1 day ago
ARTICLE AD BOX

நாளை மகா சிவராத்திரி! கண் விழிப்பது எப்போது? விரதமிருக்கும் முறை தெரியுமா?

Spirtuality
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: மகா சிவராத்திரி நாளை கொண்டாடப்படும் நிலையில் விரதமுறை எப்படி இருக்கிறது என்பதையும் எந்த நாளில் கண் விழிப்பது என்பதையும் பார்க்கலாம்.

மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இது ஒரு அற்புதமான நாளாக கருதப்படுகிறது.

maha shivratri 2025 2025

சிவனுக்கு 5 சிவராத்திரிகள் உள்ளன. அதாவது யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, மாச சிவராத்திரி, ஆண்டுதோறும் வரும் மகா சிவராத்திரி ஆகும்.

சிவனுக்குரிய இரவு என்பதாகும். மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்தசியில் வரும். ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவதே இந்த சிவராத்திரியின் நோக்கமாகும். உணவையும் தூக்கத்தையும் கட்டுப்படுத்துவது.

இந்த சிவராத்திரி என்பது ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் கொண்டாடப்படுவதாகும். அதாவது குளிர்காலத்தில் இருந்து வசந்த காலத்திற்கு வருவதை உணர்த்தும் ஒரு பூஜை ஆகும்.

அந்த வகையில் இந்த ஆண்டு சிவராத்திரி எப்போது என்பதில் சிலருக்கு குழப்பங்கள் இருக்கின்றன. அதாவது பிப்ரவரி 26 ஆம் தேதி நாளை இரவு 12.09 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் 27ஆம் தேதி நள்ளிரவு 12.59 மணி வரை அனுசரிக்கப்படுகிறது.

சிவராத்திரியின் போது அனைத்து சிவன் கோயில்களிலும் 4 கால பூஜை நடைபெறும். காலையில் குளித்து முடித்துவிட்டு எதையும் உண்ணாமல் விரதம் இருந்து 4 கால பூஜைகள் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விரதத்தை கலைக்க வேண்டும்.

விரதத்தின் போது சிவ நாமத்தை சொல்ல வேண்டும். திருவாசகம் படிக்கலாம். சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இரவு முழுவதும் பக்தர்கள் கோயிலிலேயே இருப்பார்கள். ஒவ்வொரு கோயிலிலும் நடக்கும் பூஜைகளில் கலந்து கொண்டு சிவனின் ஆசிர்வாதத்தை பெறுவார்கள்.

இரவு பக்தர்கள் கண்விழிப்பதால், கோயில்களில் சிவன் தொடர்பான நாடகங்கள், பரதநாட்டியங்கள் , சிவபுராணம், 108 நாமாவளி உள்ளிட்டவை நடைபெறும்.

சிவராத்திரிக்கு எப்போது கண் விழிப்பது என்பது சிலருக்கு சந்தேகம் இருக்கும். நாளை காலை குளித்துவிட்டு நீராகாரத்தை சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். பின்னர் மாலை சிவனின் படத்திற்கோ சிலைக்கோ அபிஷேகம் செய்யலாம், நெய்வேத்தியம் செய்யலாம்.

இதைத் தொடர்ந்து நாளை இரவு முழுவதும் கண்விழித்து அடுத்த நாள் விரதத்தை முடிக்கலாம். முடிந்தவர்கள், அடுத்த நாள் சிவன் கோயிலுக்கு சென்று விரதத்தை முடிக்கலாம்.

More From
Prev
Next
English summary
Maha Shivaratri 2025: Do you know when should we awake without sleep?vee
Read Entire Article