நாளை 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை அறிவிப்பு..!

3 hours ago
ARTICLE AD BOX

நாளை 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை அறிவிப்பு..!

Rain
நாளை, அதாவது பிப்ரவரி 28ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே,  10 மாவட்டங்களில் உள்ள நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
கிழக்கு திசை ட காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், மார்ச் 1ஆம் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva
Read Entire Article