“நாம தான் அதை உருவாக்கிக்கணும்” காதல் தோல்விற்கு பின் தமன்னா போட்ட பதிவு வைரல்…!!

3 hours ago
ARTICLE AD BOX

நடிகை தமன்னா விஜய் வர்மாவை காதலிப்பதாக சில வருடங்களுக்கு முன்பாக கிசுகிசுக்கப்பட்டது. அவர்கள் பார்ட்டியில் முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் போட்டோவும் இணையத்தில் வைரலானது. அதன் பிறகு தான் அவர்கள் தங்களுடைய காதலை  வெளிப்படையாக பொதுவெளியில் அறிவித்தார்கள். பின்பு ஜோடியாக வெளியே சுற்ற ஆரம்பித்தார்கள். ஆனால் தற்போது தமன்னாவும், விஜய் வர்மாவும் பிரேக்கப் செய்து கொண்ட தாக பாலிவுட் மீடியாக்களில் தொடர்ந்து செய்தி வெளிய வந்து கொண்டிருக்கிறது.

இருவரும் காதல் தோல்விக்காக தங்களுடைய நண்பர்களுக்கு தனித்தனியாக இருவரும் விருந்து வைத்தார்கள் என்றும் கூறினார்கள். இந்நிலையில் காதல் தோல்விக்கு பிறகு தமன்னா வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, “வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என்று எதிர்பார்த்து யாரும் காத்திருக்க வேண்டாம். நாம் தான் அற்புதங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனால் காதல் தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்கு தமன்னா இப்படி கூறியுள்ளாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Read Entire Article