ARTICLE AD BOX
நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை.. புறம் பேசாதீர்கள்.. திரிஷா ஓபன் டாக்
சென்னை: திரிஷாவின் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஏப்ரல் பத்தாம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸாகிறது. அதில் ரம்யா என்கிற கதாபாத்திரத்தை திரிஷா ஏற்றிருக்கிறார். நிச்சயம் அந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்கிற நம்பிக்கை ரசிகர்களிடையே இருக்கிறது. குட் பேட் அக்லி படம் தவிர்த்து தக் லைஃப், விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களிலும் அவர் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக 20 வருடங்களுக்கும் மேலாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் திரிஷா. நயன்தாராவும் திருமணம் ஆனதைத் தொடர்ந்து நடித்தாலும் பெரிய அளவில் வெற்றிகள் அவருக்கு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் திரிஷா மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அடுத்ததாக குட் பேட் அக்லி, தக் லைஃப், விஸ்வம்பரா உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நோ திருமணம்: திரிஷாவுக்கு 40 வயதுக்கு மேல் ஆனாலும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துவருகிறார். இவர் ராணா டகுபதியுடன் காதலில் இருந்தார். ஆனால் அது பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து வருண் என்ற தொழிலதிபருடன் திரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திடீரென அந்தத் திருமணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய திருமணம் நின்று போனது குறித்து சில வருடங்களுக்கு முன்பு திரிஷா அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
நான் இங்கு ரவுடி பேபிதான்.. ஆனால் அங்கு அப்படி இல்லை.. சாய் பல்லவி ஓபனா சொல்லிட்டாங்களே
திரிஷாவின் பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த அந்தப் பேட்டியில், "நான் சினிமாவில் இருப்பது எனக்கு ரொம்பவே கடினமானதாக இருக்கிறது. சினிமாவில் நான் நடிகையாக வென்றுவிட்டாலும்; நான் எனது குடும்பத்துக்கு ஒரு பெண் என்பதால் என்னை அவ்வளவு பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள். நான் யாரையும் பயன்படுத்தவும் இல்லை; யாருக்கும் துரோகம் செய்யவும் இல்லை. இன்றுகூட எனக்கு யாராவது துரோகம் செய்தால் கோபம் வரும். உடனே எனது அம்மாவோ, 'இதுதான் உலகம். அதனால் ரிலாக்ஸாக இரு' என்று சொல்வார்.
பயன்படுத்தியிருக்கிறது: இந்த சினிமா உலகம் நம்மை பல விஷயங்களுக்கு பயன்படுத்தியிருக்கிறது. ஏனெனில் நான் ஏராளமான நெகட்டிவிட்டியை பார்த்துவிட்டேன். அவர்கள் நம்மை பற்றி பரப்பும் நெகட்டிவிட்டி நம்மை கீழே அழைத்து செல்லும். அது எல்லாமும் என்னை மேலும் மன உறுதி கொண்டவளாக மாற்றுகிறது. என்னுடைய திருமணம் ரத்து ஆனது தலைப்பு செய்தியாக மாறியது. சில நேரங்களில் அது எனக்கு சோகத்தை ஏற்படுத்தியது. என்னை பற்றி ஏதோ ஒரு கதையை பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னை அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
போடு வெடிய.. ஷாருக்கான் - தீபிகா படுகோனே இணையும் பதான் 2.. ஷூட்டிங் எப்போ தெரியுமா?
யாருக்கும் தெரியாது: என்னுடைய திருமணம் ரத்து ஆனதுதான். ஆனால் அந்த விஷயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்குமே நிச்சயமாக தெரியாது. அதனால் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஒருவரை பற்றி புறம் பேசுவது அவ்வளவு ஆரோக்கியமான ஒன்று இல்லை. என்னை பற்றி சொல்லப்படும் கதைகள் பற்றி எனக்கு துளியும் கவலை இல்லை. ஆனால் தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளித்து அதிலிருந்து விட்டு சென்றுவிடலாம். என்னை பற்றி வரும் கிசுகிசுக்களை கேட்டு அம்மா, அப்பா, பாட்டி என எல்லோருமே பயங்கரமாக சிரிப்பார்கள்" என்றார்.