<p>நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை அளித்த பாலியல் புகாரில், வளசரவாக்கத்தில் இன்று ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று ஆஜாரகவில்லை. இந்நிலையில், அவர் வீட்டில் இன்று நோட்டீஸ் ஒட்டபட்டது. ஆனால்,அதை சீமானின் வீட்டில் இருப்போர் கிழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. </p>
<p>இந்நிலையில், இதுகுறித்து சீமான் தெரிவிக்கையில் ,” நான் திட்டமிட்ட நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். யாருக்கும் பயந்து ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லை. நாளைக்கும், ஆஜராக மாட்டேன், என்ன செய்வீர்கள் என சீமான் தெரிவித்தார். </p>