ARTICLE AD BOX
நான் பயங்கரமான ரசிகை... விஜய்க்கும் எனக்கும் இனிமேதான் ஆரம்பம்.. செம குஷியில் பிரியாமணி!
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜயின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்நிலையில், பிரியாமணி விஜய் படம் குறித்த அப்டேட் ஒன்றை தந்துள்ளார். நானும் உங்களை போல ஆவலுடன் காத்திருப்பதாக பிரியாமணி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன்: தவெக கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட முடிவெடுத்துள்ளார். ஜனநாயகன் தான் இவரது கடைசி படம். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் அரசியல் குறியீடுகளுடன் வெளியானது. எம்ஜிஆர் நடித்த எங்கள் வீட்டு பிள்ளையில் இடம்பெற்ற பாடல் வரிகளான தலைவன் இருக்கிறான், நான் ஆணையிட்டால் கேப்சனுடன் போஸ்டர் வெளியானது. இதில், எம்ஜிஆரை போன்று சாட்டையை கையில் பிடித்திருப்பார் விஜய். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கொண்டாடினர்.

எஸ்ஏசி போட்ட பாதை: நாளைய தீர்ப்பு படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனாலும், இந்த முகம் தான் ஹீரோவா என்று விமர்சிக்கப்பட்டார். இயக்குநரின் மகனாக அறிமுகம் கிடைத்தாலும், கடின முயற்சியால் ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று புகழப்பட்டார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நாயகன் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது அரசியல் என்ட்ரி மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு பிடித்த அண்ணா: ரசிகர்களால் அன்புடன் அண்ணா என்று விஜய் அழைக்கப்படுகிறார். அவர் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் குட்டி ஸ்டோரி ஒன்றை கூறி ரசிகர்களை குதூகலப்படுத்துவார். அறிவுப்பூர்வமான கதைகளோடு, பெற்றோர்களை மதியுங்கள் அவங்க இல்லாமல் நாம் இல்லை, உசுப்பேத்துறவங்க கிட்ட கம்முன்னு, கடுப்பேத்துறவங்க கிட்ட கம்முன்னு இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என கூறி எதிர்ப்பாளர்களை கூட மதிக்கும் நடிகராக உயர்ந்தார். விஜய் என்றால் நண்பன், நண்பி, தோழன், தோழிகளுக்கும் பிடிக்கும். இந்நிலையில், விஜயின் ரசிகையான பிரியாமணி அவருடன் நடிக்க இருப்பதை பகிர்ந்துள்ளார்.

விஜயின் தீவிர ரசிகை: ஜனநாயகன் படத்தில் பிரியாமணி நடிக்கிறார் என செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து சமீபத்தில் கேட்ட கேள்விக்கு நான் விஜயின் தீவிர ரசிகன். அவருடன் நடிப்பது மிருந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. எனக்கும் அவருக்கும் உள்ள காம்பினேஷன் காட்சிகளில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
