நான் தொலைத்ததை இரண்டு தசாப்தங்கள் கழித்து மீண்டும் பெற்றேன்.. அமரன் இயக்குனர் நெகிழ்ச்சி..!

2 hours ago
ARTICLE AD BOX

Director Rajkumar Periyasamy: தமிழ் சினிமாவில் ரங்கூன் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. கௌதம் கார்த்திகை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 6 வருடங்கள் கழித்து ராஜ்குமார் இயக்கிய திரைப்படம் அமரன்.

அமரன் திரைப்படம்: கடந்த 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்து வரதராஜனின் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார்.


படம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டு கொடுத்தது. இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் ஜீவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

படம் பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்லாமல் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

தனுஷுடன் ராஜ்குமார்: அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷ் உடன் அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கு கமிட்டாகி இருக்கின்றார். தனுஷின் 55 ஆவது படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வந்தது.

படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்றாலும் ராஜ்குமார் பெரியசாமி திரைக்கதை பணியில் ஈடுபட்டு வருகின்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாகவும் பேச்சு அடிபட்டு வருகின்றது.

மணிரத்னம் புகைப்படம்: இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் இயக்குனர் மணிரத்தினத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'அமரன் திரைப்படம் வெளியாகி தற்போது 100 நாட்களில் நெருங்க இருக்கின்றது.


மணி சார், நீங்கள்தான் திரைப்படங்களைப் பற்றி கனவு காணவும், திரைப்படங்களை நான் இயக்கவும் காரணமாக இருந்தீர்கள். நான் முதன் முதலில் உங்களுடன் தான் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டேன். 2005 ஆம் ஆண்டு உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். ஆனால் அது தொலைந்துவிட்டது.

அதற்காக மிகுந்த மன வேதனை அடைந்தேன். உங்களுடன் இப்போது இரண்டு தசாப்தங்கள் கழித்து 2 படங்களை இயக்கிய பிறகு உங்களுடன் அருகில் நின்று புகைப்படத்தை எடுப்பதற்கு தைரியம் வந்திருக்கின்றது. அமரன் திரைப்படம் 100வது நாளில் நெருங்கும் இந்த வேலையில் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி' என்று குறிப்பிட்டு இருக்கின்றார். 

Read Entire Article