நான் சாரி கேட்கிறேன் ப்ளீஸ்.. போலீஸிடம் பேசிய சீமான் மனைவி.. என்னங்க சாரி.. கடுப்பான அதிகாரி!

3 hours ago
ARTICLE AD BOX

நான் சாரி கேட்கிறேன் ப்ளீஸ்.. போலீஸிடம் பேசிய சீமான் மனைவி.. என்னங்க சாரி.. கடுப்பான அதிகாரி!

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அழைத்து செல்லும் போது, சீமான் மனைவி கயல்விழி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோர்ட் ஒட்டும் சம்மனை கிழிக்க கூடாது என்ற விதி உள்ளது.

seeman naam tamilar katchi

ஆனால் அதை மீறி நடிகை பாலியல் வழக்கில், சீமான் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டு காவலாளி தாக்கியதால் அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது போலீஸ்.

சீமான் காவலாளி மிரட்டல்

விசாரணைக்கு வந்த போலீசாரை சீமான் வீட்டின் காவலாளி தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து போலீசார் அங்கே வந்து காவலாளி சுபாகர், அமல்ராஜ் இருவரையும் கைது செய்தனர். அதோடு அவரின் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய சீமானின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், நடிகை அளித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.

மன்னிப்பு கேட்ட சீமான் மனைவி

சீமான் ஓசூரில் உள்ள நிலையில் சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அழைத்து செல்லும் போது, சீமான் மனைவி கயல்விழி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார். போலீசாரிடம் சென்று.. சார் சாரி சார் என்று என்று கூறினார்.

அதற்கு போலீஸ் அதிகாரி.. என்னங்க சாரி.. என்ன சாரி.. விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியிடம் இப்படித்தான் செய்வீர்களா? என்று கடுமையாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து கயல்விழி அந்த போலீஸ் அதிகாரியிடம் சாரி கேட்டபடியே பின்னால் சென்றார்.

வழக்கறிஞர் மறுப்பு

சீமான் வழக்கறிஞர் டீம் அளித்துள்ள விளக்கத்தில், சீமான் வீட்டு காவலாளி போலீசாரை தாக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

முன்னாள் ராணுவ வீரர் என்பதால் உரிமம் பெற்ற துப்பாக்கியை காவலாளி வைத்துள்ளார். நோட்டீஸ் ஒட்டிய பின் அதில் உள்ள தகவலை தெரிந்த பின்னரே கிழித்துள்ளனர். சீமான் வீட்டில் குண்டு வீசப்போவதாக வந்த தகவலால் காவலாளி துப்பாக்கியுடன் இருந்தார், என்று சீமான் வழக்கறிஞர் டீம் தெரிவித்துள்ளது.

சீமான் வீட்டில் சம்மன்

நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாராக வேண்டும் என்று சீமானுக்கு சம்மன்அனுப்பிட்டு உள்ளது. சென்னையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் வளசரவாக்கம் போலீசார் சம்மனை ஒட்டியுள்ளனர்

போலீசார் சம்மன் ஒட்டிய சில நிமிடங்களில் அந்த சம்மன் கிழிக்கப்பட்டதால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோர்ட் ஒட்டும் சம்மனை கிழிக்க கூடாது என்ற விதி உள்ளது. அதை மீறி இப்படி செய்ததால் சீமான் மீது எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

More From
Prev
Next
English summary
Naam Tamilar Katchi Chief Seeman wife Kayalvizhi apologised to police for the secuirty issue
Read Entire Article