நான் குறும்படங்கள் எடுத்தவன் ஆனால்….. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ‘கிங்ஸ்டன்’ பட இயக்குனர்!

3 hours ago
ARTICLE AD BOX

கிங்ஸ்டன் படத்தின் இயக்குனர் கமல் பிரகாஷ் டிரைலர் வெளியீட்டு விழாவில் படம் குறித்து பேசி உள்ளார்.நான் குறும்படங்கள் எடுத்தவன் ஆனால்..... ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் 'கிங்ஸ்டன்' பட இயக்குனர்!ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கிங்ஸ்டன். இந்த படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். இதனை ஜி.வி. பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்த இசையும் அமைத்துள்ளார். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்துள்ளார். பேச்சுலர் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும் கிங்ஸ்டன் படமானது ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது.நான் குறும்படங்கள் எடுத்தவன் ஆனால்..... ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் 'கிங்ஸ்டன்' பட இயக்குனர்! கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியான டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 27) மாலை 7 மணி அளவில் கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் வெற்றிமாறன், சுதா கொங்கரா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். நான் குறும்படங்கள் எடுத்தவன் ஆனால்..... ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் 'கிங்ஸ்டன்' பட இயக்குனர்!அப்போது இப்படத்தின் இயக்குனரான கமல் பிரகாஷ், “கிங்ஸ்டன் ட்ரெய்லர் இந்த படத்துக்கான முயற்சியை வெளிப்படுத்தும் என நம்புகிறேன். கிங்ஸ்டன் படத்தின் ஐடியா மிகப்பெரியது. ஆனால் அதற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவை. நான் குறும்படங்கள் எடுத்தவன். ஆனால் இப்போது ரூ.20 கோடியில் படம் எடுத்திருக்கிறேன்” என்று பேசியுள்ளார்.

Read Entire Article