ARTICLE AD BOX

கோமாளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி கதாநாயகனாக நடித்த திரைப்படம் லவ் டுடே. இந்த படம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது டிராகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன்,” நான் ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஷார்ட் பிலிம் பண்ணும் போது ஃபுல்லா கிளீன் ஷேவ் பண்ணி இருந்தேன்.
நான் ரொம்ப நாளா ரொம்ப சின்ன பையன் மாதிரி தெரிவேன்னு சேவ் பண்ணாம எப்பயுமே தாடி வச்சிருப்பேன். கோமாளி அப்போதான் தாடி வளர்க்க ஆரம்பித்தேன். ஏன்னா டைரக்டர் ரொம்ப சின்ன பையன் சொல்லிடுவாங்க கொஞ்சம் பெரிய பையனா தெரியும் என்று தாடியோடு தான் இருப்பேன். எப்பயாவது ஒரு டைம் தான் நான் சேவ் பண்றது. அதனால டிராகன் படத்துக்காக சேவ் பண்ணும்போது ரொம்ப நாளுக்கு அப்புறம் என்னை அப்படி பார்த்தது எனக்கு சந்தோசமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.