ARTICLE AD BOX
நான் இங்கு ரவுடி பேபிதான்.. ஆனால் அங்கு அப்படி இல்லை.. சாய் பல்லவி ஓபனா சொல்லிட்டாங்களே
சென்னை: சாய் பல்லவி தமிழில் கடைசியாக அமரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கியமாக சாய் பல்லவியின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் தெலுங்கு மொழியில் அவர் கடைசியாக நடித்த தண்டேல் திரைப்படமும் மெகா ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் அமரன் வெற்றி விழாவில் அவர் பேசியது ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். அந்தப் படம் மெகா ஹிட்டானதோடு மட்டுமின்றி சாய் பல்லவிக்கு நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுக்கொடுத்தது. மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவருக்கு ஏராளமானோர் ரசிகர்களாக மாறினார்கள். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு சாய் பல்லவிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் கிளாமர் இல்லாமல்; தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்தார்.

பிஸி நடிகை: அப்படி அவர் நடித்த படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திக்கொண்டே வந்தார். தமிழிலும் அவர் மாரி 2, என்ஜிகே, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மாரி 2, என்ஜிகே ஆகிய படங்கள் சரியாக போகாவிட்டாலும் கார்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் சாய் பல்லவியின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது. இதன் காரணமாக அவருக்கு சில விருதுகளும் கிடைத்தன. சூழல் இப்படி இருக்க அவரது வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது அமரன்.
அமரன் மெகா ஹிட்: முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவான அந்தப் படத்தில் இந்து ரெபெக்கா வர்கீஸாக சாய் பல்லவி நடித்திருந்தார். முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். படத்தின் மேக்கிங், இசை என அத்தனையும் அட்டகாசமாக இருந்ததன் காரணமாக படம் மெகா ஹிட்டடித்தது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட அந்தப் படம் மொத்தம் 350 கோடி ரூபாயை வசூலித்தது.
அஜித்தின் குட் பேட் அக்லி.. என்னது ஷாலினியும் நடிச்சிருக்காங்களா?.. இது என்னங்க புது புரளி
சாய் பல்லவி க்ளாஸ்: இந்தப் படத்தில் அத்தனையையும் மீறி சாய் பல்லவியின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. காதல் காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் அவரது நடிப்பு படு க்ளாஸாக இருந்தது என்றும்; அவரது நடிப்பை மட்டும் எடுத்துவிட்டால் இந்தப் படத்தில் ஒன்றுமே இல்லை; ஏன் படமே இல்லை என்று ஓபனாக பேசினார்கள் ரசிகர்கள். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு சாய் பல்லவியின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
அமரன் வெற்றி விழா: தமிழில் அமரன் எப்படி வெற்றி பெற்றதோ அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த தண்டேல் திரைப்படம் மெகா ஹிட்டானது. அப்படம் 100 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. இந்நிலையில் அமரன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் சாய் பல்லவி பேசியது ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் பேசுகையில், "தெலுங்கில் எனக்கு நல்ல நல்ல ரோல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை நான் இங்கு ரவுடி பேபி மட்டும்தான். தமிழில் எனக்கு நல்ல கேரக்டர்கள் ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. ராஜ்குமார் பெரியசாமிதான் அமரன் என்ற ஒரே படத்தில் தமிழ் ஆடியன்ஸ் மத்தியில் என்னை நடிகை சாய் பல்லவியாக காண்பித்திருக்கிறார்" என்றார்.
மகா சிவராத்திரியை மகா கும்பமேளாவில் குளித்துக் கொண்டாடும் விஜயகாந்த் மகன்.. செம போட்டோ!