ARTICLE AD BOX
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.கே பேட்டை பகுதியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. எங்கும் போதைப்பொருள் உலாவுகிறது. அதனால் பல குற்றங்கள் நிகழ்கிறது. 3 வயது சிறுமி முதல் இளம்பெண் வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
உரிய நடவடிக்கை இல்லை
வெளிமாநிலங்களில் முன்பு வந்த செய்திகளைப்போல, தற்போது தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் கொடூரமாக நடக்கிறது. இவ்வாறான குற்றங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
இதையும் படிங்க: #Breaking: எங்கே செல்கிறது சட்டம் ஒழுங்கு? திருப்பூரில் கணவன் கண்முன் பலாத்காரம்.. அன்புமணி ஆவேசம்.!
தமிழ்நாட்டில் இப்படி நடக்குமா? என சிந்தித்து அதிர்ச்சியுறும் அளவு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது. நான் ஆட்சியில் இருந்திருந்தால், வேற மாதிரி செய்திருப்பேன், வெட்டியிருப்பேன்.
காவல்துறையை என்னிடம் தந்து பாருங்கள். போதைப்பொருளை நான் ஒழித்து காண்பிக்கிறேன்" என ஆவேசமாக பேசினார்.
அமைச்சர் பதில்
இந்த விசயத்திற்கு பதில் அளித்த திமுக அமைச்சர் சேகர் பாபு, "பாமக கட்சியை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. அப்பாவும், மகனும் சண்டையிடுகிறார்கள். அவர் எப்படி காவல்துறையை கட்டுப்படுத்தி, போதைப்பொருள் பிரச்சனையை ஒழிப்பார்? என பதில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: கலவர பூமியாகும் தமிழ்நாடு - அன்புமணி உச்சகட்ட எச்சரிக்கை.. அரசுக்கு எதிராக போர்க்கொடி.!