நானியின் ஹிட் படத்தின் டீசர் தேதி!

3 days ago
ARTICLE AD BOX

தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள ஹிட் திரைப்படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இதையும் படிக்க : ஓடிடியில் வெளியானது வணங்கான்!

இந்த நிலையில், சைலேஷ் கொலனு இயக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஹிட் படத்தின் மூன்றாம் பாகத்தில் நானி நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக, கோடை விடுமுறை மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஹிட் மூன்றாம் பாகம் வருகின்ற மே 1-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

Read Entire Article