ARTICLE AD BOX
நானி நடிக்கும் தி பாரடைஸ் படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான ஹாய் நான்னா, சரிபோதா சனிவாரம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இவர் தமிழிலும் வெப்பம், நான் ஈ ஆகிய படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். அடுத்ததாக ஹிட் 3 போன்ற படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார் நானி. இந்நிலையில் தான் இவர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். நானியின் 33 வது படமாக உருவாகும் இந்த படத்தினை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் நானியுடன் இணைந்து சோனாலி குல்கர்னி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.