ARTICLE AD BOX
’நாதஸ்வரம்’ சீரியல் நடிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தொலைக்காட்சி சீரியல் நட்சத்திரங்கள் அவருக்கு நேரில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதன் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
சன் டிவியில் ஒளிபரப்பான ’நாதஸ்வரம்’ சீரியலில் நடித்த நடிகை ஸ்ரித்திகா. இந்த சீரியல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு, தொழிலதிபர் சனீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார். அதன் பின்னர், மகராசி சீரியலில் ஹீரோவாக நடித்த ஆரியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆரியன், மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ். எஸ். ஆர்.-ன் பேரன் ஆவார்.
இந்நிலையில் சமீபத்தில், ஸ்ரித்திகா கர்ப்பமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, நேற்று வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு ஆரியன் - ஸ்ரித்திகா தம்பதியை வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியின் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட நிலையில், தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.