ARTICLE AD BOX
நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து பாவேந்தன் விலகப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.சமீப காலமாக, சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து பொறுப்பாளர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் என பலரும் விலகி, மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். மேலும், நேற்று தான், நாம் தமிழர் கட்சியில் இருந்து மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இன்று நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக பாவேந்தன் அறிவித்துள்ளார். சீமான் இன்று ராணிப்பேட்டைக்கு செல்லவுள்ள நிலையில், பாவேந்தன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சியை சீமான் வீழ்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பெரியாரையும், பிரபாகரனையும் எதிரெதிராக நிற்க வைப்பது பாஜக – சங் பரிவார்களுக்கு விருந்தாக அமையும் என விமர்சித்துள்ளார்.
சீமானை கடாசித் தள்ளிய காளியம்மாள்..! அடுத்து எந்தக் கட்சி..?