நாட்டை காப்பது நமது வேலை இல்லை, கடமை.. ஆர்யாவின் 'Mr.X' ரிலீஸ்..!

1 day ago
ARTICLE AD BOX

இந்திய உளவுத்துறை வீரர்களின் வாழ்க்கை மற்றும் தியாகங்களில் உருவான கதை என்ற வாசகங்களுடன் ஆர்யா நடித்த "மிஸ்டர் எக்ஸ்" என்ற படத்தின் டீசர் தொடங்கியுள்ளது.

இந்த டீசரில் உள்ள காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. "நாட்டை பாதுகாப்பது நமது வேலை இல்லை, நம்முடைய கடமை " என்ற வசனம் உள்பட இந்த டீசரில் உள்ள அனைத்து வசனங்களும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

நாட்டை பாதுகாப்பதற்காக, எக்ஸ் டீம் களமிறங்கும் நிலையில், அந்த டீம் சந்திக்கும் சவால்களே இந்த படத்தின் கதை என டீசர் மூலம் தெரிய வருகிறது.

ஆர்யா, கெளதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார் உள்ளிட்ட அந்த டீம் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? அவர்களுக்கு ஏற்படும் சோதனைகள் என்ன? அவர்களின் குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன? ஆகியவற்றை, இயக்குநர் மனு ஆனந்த் இந்த டீசரின் மூலம் விரிவாகக் காட்டியுள்ளார். திபு நினன் தாமஸ் இசையில் உருவாகிய அந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Read Entire Article