ARTICLE AD BOX
சர்வதேச அளவிலான இந்தியாவின் ஏற்றுமதி வணிகம் நான்காவது மாதமாக சரிந்து 36.91 பில்லியனாக உள்ளது.
சர்வதேச அளவிலான போர் பதற்ற எதிரொலி மற்றும் பெட்ரோலிய விலையில் ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றால் நாட்டின் இறக்குமதி சரிந்துள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
கடந்த ஆண்டு நாட்டின் ஏற்றுமதி இதே மாதத்தில் 41.41 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் இப்போது நாட்டின் ஏற்றுமதி 36.91 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் பிப்ரவரியில் மட்டும் 14.05 பில்லியன் டாலர் (ரூபாய் மதிப்பில் ரூ. 12 ஆயிரம் கோடி) அளவுக்கு நாட்டின் இறக்குமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று நாட்டின் இறக்குமதியும் 50. 96 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்திய நிதியாண்டில் ஏப்ரல் - பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் வணிகப் பொருள்கள் மற்றும் சேவைகள் 6.24% அதிகரித்து 750.53 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஆண்டு 706.43 டாலராக இருந்தது.