ARTICLE AD BOX
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ளஒன்றிய அரசு பல்கலையில் 5400 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் கூறும்போது,’ நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் 2025 ஜனவரி 31ம் தேதி கணக்குப்படி, 5,400 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை ஓபிசி, எஸ்டி மற்றும் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டவை. இதில் எஸ்சிக்கு 788, எஸ்டிக்கு 472, ஓபிசிக்கு 1,521. இந்த பல்கலைக்கழகங்களில் 7,825க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கங்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன’ என்றார்.
The post நாடு முழுவதும் 5400 பேராசிரியர்கள் பணியிடம் காலி appeared first on Dinakaran.