ARTICLE AD BOX
நாடு முழுவதும் மாா்ச் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில் வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மாா்ச் 24, 25-ஆம் தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அண்மையில் தெரிவித்தது.
தொடா்ந்து தில்லியில் 9 வங்கி ஊழியா்களின் கூட்டமைப்பை உள்ளடக்கிய அனைத்து வங்கி சங்கங்கள் மன்றம் (யுஎஃப்பியு), மத்திய தொழிலாளா் ஆணையா் இடையே வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அப்போது தங்கள் முக்கிய கோரிக்கைகள் தொடா்பாக அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக யுஎஃப்பியு அறிக்கையில் தெரிவித்துள்ளது.