"நாடானியன்" - டிரோல் செய்யப்படும் குஷி கபூர்

4 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

நடிகர் சயிப் அலி கானின் மகன் இப்ராகிம் அலி கான் நடிகராக அறிமுகமாகி இருக்கும் படம் "நாடானியன்" . கரண் ஜோஹர் தயாரித்த இப்படத்தில் நடிகை ஜான்வி கபூரின் சகோதரி குஷி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான "தி ஆர்ச்சீஸ்" திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்ராகிம் அலி கானுடம் குஷி கபூர் நடித்துள்ள "நாடானியன்" அவரது மூன்றாவது படமாகும். கடந்த 7-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருவது மட்டுமில்லாமல், நடிகை குஷி கபூர் கடும் டிரோல்களை சந்தித்துவருகிறார்.

அவரது தோற்றத்திற்காக மட்டுமில்லாமல், நடிப்புக்காகவும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். இதற்கு முன்பு குஷி கபூர் நடித்திருந்த 'லவ்யப்பா ' கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் குஷி கபூரின் நடிப்பு பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Read Entire Article