ARTICLE AD BOX
விண்வெளித்துறையில் சாதனைப்படைத்துவரும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா தனது அடுத்த சாதனையாக ஒரே நாளில் 5 ராக்கெட்டை விண்ணில் ஏவியுள்ளது.
விண்வெளி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் நம்பமுடியாத வேகத்தை வெளிப்படுத்தும் விதமாக நாசாவானது ஐந்து ராக்கெட்டுகளை அடுத்தடுத்து சில மணி நேரத்திற்குள்ளாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் , ப்ளூ ஆரிஜின், ராக்கெட் லேப் மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஆகிய அனைத்து நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து இன்று ஒரே நாளில் 5 ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்பி சாதனை படைத்துள்ளது.
விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள்
1. ஃபால்கன் 9 பிளாக் 5 இந்த ராக்கெட்டை ஸ்டார்லிங்க் குழு இன்று கேப் கனாவெரல் SFS, புளோரிடாவிலிருந்து ஏவியுள்ளது.
2. நியூ ஷெப்பர்ட் NS-29 என்ற ராக்கெட்டை , மேற்கு டெக்சாஸிலிருந்து செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டின் நோக்கம் சந்திர ஈர்ப்பு விசையை உருவகப்படுத்துவதுடன், எதிர்கால சந்திர பயணங்களுக்கான தொழில்நுட்பங்களை சோதித்தல்
3. எலக்ட்ரான்/கியூரி IoT 4 You and Me என்ற ராக்கெட்டானது, லேப் LC-1A, மஹியா தீபகற்பம், நியூசிலாந்திலிருந்து ஏவப்பட்டது.
4. World View Legion இந்த ராக்கெட் இது மாக்சர் ஆல் உருவாக்கப்பட்டு இயக்கப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.
5. ரஷ்யாவின் வடமேற்கில் உள்ள பிளெசெட்ஸ்க் காஸ்மோட்ரோமில் இருந்து ரோஸ்கோஸ்மோஸ் சோயுஸ் ராக்கெட்டானது அறியப்படாத ஒரு பேலோடை ஏவியுள்ளது.
இந்த செயற்கைக்கோள் விண்மீன்கள், சந்திர ஆய்வு மற்றும் பூமி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு விண்வெளி அடிப்படையிலான முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.